
இவ்வாறான போலி கணக்குகளை எவ்வாறு
அடையாளம் காண்பது?
அடையாளம் காண்பது?
முறை 1 : Profile Picture
இவர்களின் Profile Picture ஐ வைத்து ஓரளவு கணிக்கலாம். Profile Picture ஐ நீண்டகாலம் மாற்றாமல் வைத்திருப்பார்கள். ஏதாவது ஒரு பிரபல, கவர்ச்சியான பெண்களின் புகைப்படத்தை Profile Picture ஆக வைத்திருப்பார்கள். இவர்களின் புகைப்பட ஆல்பத்தில் இரண்டிற்கு மேற்பட்ட படங்கள் இருப்பது அரிது.
முறை 2: இவர்களுடைய நண்பர்கள் பட்டியலில் அதிகளவான ஆண்கள் நண்பர்களாக இருப்பார்கள். ( இதில் என்ன தவறு என்கிறீர்களா? உண்மையான பெண்கள் தமது சுய பாதுகாப்பு கருதி முகம்தெரியாத ஆண்களை நண்பர்களாக இணைப்பதில்லை)
முறை 3: யார்மேலாவது சந்தேகம் ஏற்பட்டால் அவர்கள் Facebook இல் இணைந்த திகதியினையும் அவர்களது நண்பர்கள் எண்ணிக்கையையும் ஒப்பிட்டு பாருங்கள். குறைந்த காலத்தில் ஆயிரக்கணக்கான நண்பர்கள் பட்டியலில் இருந்தால் அந்தக்கணக்கு போலியாக இருப்பதற்கான சாத்தியம் அதிகள். காரணம் விளம்பரத்துக்காக கண்டபடி நண்பர்களை சேர்ப்பார்கள்.

முறை 5 : இவர்களுடைய Wall ஐ பாருங்கள். Wall முழுவதும் நண்பர்களை இணைத்துக்கொண்ட தகவல்கள் மட்டுமே இருக்கும். இணையத்தளங்கள் வைத்திருக்கும் போலி கணக்காயின் wall முழுவதும் அவர்களின் பதிவுகள் பகிரப்பட்டிருக்கும்.
முறை 6: அவர்களுடைய Page Likes ஐ பாருங்கள். எந்தவொரு Page Likes உம் இருக்காது. அப்படி ஒன்று இரண்டு இருந்தாலும் அது அவர்களின் சொந்த (இணையத்தளங்களின்) Page ஆகத்தான் இருக்கும்.
முறை 7: போலி என சந்தேகப்படுவோரின் Activities ஐ பாருங்கள். உதாரணமாக Comments, Likes, Status. போலி கணக்காயின் இவை அதிகம் இருக்காது.
முறை 8: ஆண்களுக்கு!... பெண்களின் பெயரில் Friend Request வந்தால் அவர்களின் Profile ஐ முழுவதுமாக ஆராயுங்கள். காரணம் உண்மையான கணக்கு வைத்திருக்கும் பெண்கள் வலிந்து போய் முகம்தெரியாத ஆண்களுக்கு Friend Request கொடுப்பதில்லை.
முறை 9: போலி கணக்குகளில் அநேகமானவை பெண்களின் பெயரிலேயே இருக்கும். அதுவும் 1988 தொடக்கம் 1992 ஆம் ஆண்டு பிறந்ததாகவே Profile இல் குறிப்பிடப்பட்டிருக்கும்.
0 comments:
Post a Comment